Friday, August 31, 2007

வடபழனி கோவிலில் பார்ப்பனர்களின் புரட்டு அம்பலம்

தமிழர் கடவுளான முருகன் தமிழ் பண்பாட்டுக்குகந்த முறையில் தமிழ்ப் பழங்குடியான குறவர் இனத்தை சேர்ந்த வள்ளியை காதல் திருமணம் புரிந்தான். இதை பொறுக்க முடியாத பார்ப்பனர் தேவந்திரன் மகளான தெய்வயானை என்கிற கற்பனை பாத்திரத்தை உருவாக்கி அவளைத்தான் முருகன் முதலில் மணந்ததாக கதையை மாற்றிவிட்டனர். இப்போது கந்தன் கதை கேட்போருக்கு வள்ளிதான் முருகனின் ஆசை நாயகி போலவும் தெய்வயானைதான் முறைப்படி மணந்த மனைவி போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி சதி செய்திருந்தனர். இப்போது வடபழனி கோவில் புதுபிக்கப்பட்ட போது அவர்களையுமறியாமல் அந்த சதி வெளியாகிவிட்டது. எப்படி என்கிறீர்களா? கோவிலுக்குப் பின்னால் இரண்டு திருமண மண்டபங்கள் கோவில் சார்பில் கட்டப்பட்டு வாடகைக்கு விடத் தயாரக உள்ளன. ஒன்று பெரிய மண்டபம், இன்னொன்று சிறிய மண்டபம். பெரிய மண்டபத்துக்கு வள்ளி என்று பெயரிடப்பட்டுள்ளது. சின்ன மண்டபத்துக்கோ தெய்வயானை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதிலிருந்தே யார் பெரிய வீடு, யார் சின்ன வீடு என்று தெரிந்து விட்டதில்லையா?

பின்குறிப்பு: இந்த பதிவிற்கான இன்ஸ்பிரேஷன் இது.

http://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post_30.html

Tuesday, June 26, 2007

இது ச்ச்சும்மா

மூணு பதிவிருந்தாத்தான் தமிழ்மணத்தில ஆட்டத்துல சேத்துக்குவாங்களாமில்ல. அதுக்காக இது. கருப்பொருள் அப்படின்னு அங்க ஒன்னு கேட்டிருந்தாங்க. அதை அங்க போடலை. பொதுவா இந்த வலைப்பதிவை நான் ஆரம்பிச்சதுக்கான காரணம் - என்னுடைய கருத்துக்களை நாலு பேருகிட்ட பகிர்ந்துக்கணும்ங்கறதுக்காக. ஏற்கனவே நான் இந்த தமிழ் கூறு வலையுலகின் வாசகனா இருந்துகிட்டுத்தான் வர்ரேன் - சில பல மாதங்களா. அதுல பாத்தீங்கன்னா சிலர் சில விஷயங்களை பத்தி எழுதும்போது நம்மால கேட்டுகிட்டு சும்மா போக முடியறதில்லை. வெட்டியோ ஒட்டியோ சில விஷயங்களை சொல்ல வேண்டியதா போகுது. அப்போ அனானியாவோ இல்லை வெறும் பேர மட்டும் போட்டுகிட்டோ நம்ம கருத்தை முன் வைக்கறதுன்னுதான் இத்தினி நாளா என் வழக்கமா இருந்தது. ஆனா பாருங்க, மக்கள் ஏதோ அனானின்னா ரொம்ப இளக்காரமா பாக்கறாங்க -ஏதோ நல்ல தமிழ்ல பேசறவனை சென்னைல பாத்த மாதிரி. சில இடங்களில் சுத்த மோசம் - சுத்தமா கதவையே அடிச்சு சாத்திப்புடறாங்க, காசில்லாத விருந்தாளிய கண்ணால பாத்த மாதிரி. கேட்டா மாடரேஷன் அப்படின்றாங்க. நம்ம ஒன்னு நினைச்சா உடனே அதை சம்பந்த பட்டவங்க கிட்ட சொல்லிடனும் இல்லைன்னா என் மண்டை சுக்கு நூறா வெடிச்சுடும்னு யாரோ சாமியார் எனக்கு சின்ன வயசுலேயே சாபம் கொடுத்துட்டாராம். அதுனால நினைக்கறதையெல்லாம் அடுத்தவங்க பதிவுல சொல்லறதுக்கும் அப்படி நான் சொல்ற விஷயத்தை அவங்க மதிக்கலைன்னா குறைஞ்சது நான் என் இடத்துலயாவது போட்டு வச்சுக்கறதுக்கும்தான் இந்த வலைப்பூ. அதாவது சுருக்கமா சொல்லனும்னா, பெரும்பாலும் நமக்கு தொழில் பின்னூட்டமிடுதல் அதில்லாத போது சிறிது சொந்த பதிவுகளும் போடப்படும். அவ்ளோதான். அருள்வாக்கு ஓவர்.

வந்தனம் வந்தனம் வந்தனம்

வந்த சனமெல்லாம் குந்தணும். நமக்கு தொழில் பொட்டி தட்டறது. இங்கன சென்னைலதான் பொட்டிய தட்டி அதுல வர்ர வருமானத்துல வயத்தை கழுவிக்கினு கீறேன். என்னமோ என் கெட்ட நேரமோ இல்லை இதை படிக்கற உங்க கெட்ட நேரமோ தெரியலை, ஒரு ராகு காலத்துல இந்த வலைப்பதிவு ஆரம்பிக்கற எண்னம் வந்து என் மண்டைக்குள்ற நண்டு கணக்கா பிராண்ட ஆரம்பிச்சுது. என்னாத்தனு சொல்வேனுங்க? ஆரம்பிச்சாச்சு இந்த பதிவ. எதைபத்தி எழுதறதுன்னு கூட இன்னும் முடிவு பண்ணலீங்கோ. ஆனாக்க ரெண்டு பதிவாயிடுச்சுங்க. இப்படி ஒப்பேத்தற சூட்சுமத்தை நான் நம்ம நண்பர்கள் சிலர்கிட்டேர்ந்துதானுங்க கத்துகிட்டேன். அதுக்காக ரொம்ப டென்ஷன் ஆயிடாதீங்க மக்கா. இப்படியே காலம் முச்சூடும் உங்களை வதைக்க மாட்டேன். எதுனா உருப்படியா எழுதிடறேன் கூடிய சீக்கிரம். நீ முதல்ல எழுதுடா மவனே, அது உருப்படறா மாதிரி இருக்கா இல்லையான்னு நாங்க சொல்றோம்னு நீங்க சவுண்டு விடறது கேக்குது. அதுனால இத்தோட நம்ம புராணம் இஸ்டாப். நாளைலேர்ந்து ஒழுங்கா பதிவு போடறேனுங்கோவ்.

பொறுத்தது போதும்

பொறுத்தது போதும். பொங்கியெழடா செல்வா என ஒரு குரல். வேற யாரு? நம்ம மனசாட்சியார்தான். எத்தனை நாளுக்குத்தான் நாமளும் அனானியாவே குப்பை கொட்டறது. அதுலயும் பாதிப்பேர் தயவு தாட்சின்யமில்லாம நம்ம கமென்ட்டுகளை தூக்கி கடாசற அராஜகத்தை இன்னும் எத்தனை நாளுங்க நானும் தாங்குவேன்? என்ன ஒன்னு, ப்லாக் வச்சு, பதிவு போட்டு அதுக்கு வர கமென்ட்களை பாத்து பக்குவமா பப்ளிஷ் பண்ணி, அதுல வர்ர கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி.... ஸ்ஸப்பா.... இப்பவே கண்ணக்கட்டுதே.. இருந்தாலும் என்ன பண்ண? எலி வளைன்னாலும் ஒரு தனி வளை வேணுமாமே. பெரியாளுங்கல்லாம் சொல்லி வச்சிட்டு போயிருக்காங்கோ. அதுனால இனிமேட்டு இங்கனதான் குந்தியிருந்து குப்பை கொட்டப்போறேன். பொறுத்தருள்க தமிழ் கூறு வலையுலகே....