Tuesday, June 26, 2007

இது ச்ச்சும்மா

மூணு பதிவிருந்தாத்தான் தமிழ்மணத்தில ஆட்டத்துல சேத்துக்குவாங்களாமில்ல. அதுக்காக இது. கருப்பொருள் அப்படின்னு அங்க ஒன்னு கேட்டிருந்தாங்க. அதை அங்க போடலை. பொதுவா இந்த வலைப்பதிவை நான் ஆரம்பிச்சதுக்கான காரணம் - என்னுடைய கருத்துக்களை நாலு பேருகிட்ட பகிர்ந்துக்கணும்ங்கறதுக்காக. ஏற்கனவே நான் இந்த தமிழ் கூறு வலையுலகின் வாசகனா இருந்துகிட்டுத்தான் வர்ரேன் - சில பல மாதங்களா. அதுல பாத்தீங்கன்னா சிலர் சில விஷயங்களை பத்தி எழுதும்போது நம்மால கேட்டுகிட்டு சும்மா போக முடியறதில்லை. வெட்டியோ ஒட்டியோ சில விஷயங்களை சொல்ல வேண்டியதா போகுது. அப்போ அனானியாவோ இல்லை வெறும் பேர மட்டும் போட்டுகிட்டோ நம்ம கருத்தை முன் வைக்கறதுன்னுதான் இத்தினி நாளா என் வழக்கமா இருந்தது. ஆனா பாருங்க, மக்கள் ஏதோ அனானின்னா ரொம்ப இளக்காரமா பாக்கறாங்க -ஏதோ நல்ல தமிழ்ல பேசறவனை சென்னைல பாத்த மாதிரி. சில இடங்களில் சுத்த மோசம் - சுத்தமா கதவையே அடிச்சு சாத்திப்புடறாங்க, காசில்லாத விருந்தாளிய கண்ணால பாத்த மாதிரி. கேட்டா மாடரேஷன் அப்படின்றாங்க. நம்ம ஒன்னு நினைச்சா உடனே அதை சம்பந்த பட்டவங்க கிட்ட சொல்லிடனும் இல்லைன்னா என் மண்டை சுக்கு நூறா வெடிச்சுடும்னு யாரோ சாமியார் எனக்கு சின்ன வயசுலேயே சாபம் கொடுத்துட்டாராம். அதுனால நினைக்கறதையெல்லாம் அடுத்தவங்க பதிவுல சொல்லறதுக்கும் அப்படி நான் சொல்ற விஷயத்தை அவங்க மதிக்கலைன்னா குறைஞ்சது நான் என் இடத்துலயாவது போட்டு வச்சுக்கறதுக்கும்தான் இந்த வலைப்பூ. அதாவது சுருக்கமா சொல்லனும்னா, பெரும்பாலும் நமக்கு தொழில் பின்னூட்டமிடுதல் அதில்லாத போது சிறிது சொந்த பதிவுகளும் போடப்படும். அவ்ளோதான். அருள்வாக்கு ஓவர்.

No comments: